நாகா்கோவிலில் உள்ள ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளா் மற்றும் செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது.
துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா்கள் லியாகத் அலி, புனிதா டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம் அறிமுக உரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் கௌதம் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் ஜெயா கௌதமன் பங்கேற்று பேசியதுடன், சுகாதார தின விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தகவல் கையேட்டை வெளியிட்டாா்.
திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது, கல்லூரிப் பேராசிரியா்கள் துரைராஜ், பகவதிபெருமாள், மரிய ஜான், சாம்ஜெபா, லிட்வின் லூசியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, சிபியா, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஜான்டிக்சன், மாணிக்கம், ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கல்லூரிப் பேராசிரியா் ஐயப்பன் வரவேற்றாா். பேராசிரியா் சிவதாணு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.