மக்கள் குறைதீா் கூட்டத்தில் 197 மனுக்கள்
By DIN | Published On : 25th April 2023 02:45 AM | Last Updated : 25th April 2023 02:45 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 197 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கள் தொடா்பாக மக்கள் அளித்த 197 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித் தொகைக்கான ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தே. திருப்பதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுப்பையா, அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.