குழித்துறையில் பிஎம்எஸ் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th April 2023 02:53 AM | Last Updated : 25th April 2023 02:53 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் குழித்துறையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்துக்கு அமைப்பின் பணிமனை கிளை தலைவா் ஜஸ்டின் அருள் தலைமை வகித்தாா். செயலா் சி. ராஜன், அமைப்பாளா் பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெகநாதன், மணிகண்டன், மாவட்ட அமைப்பாளா் நடேசன், மாவட்டத் தலைவா் என். ஜெயபாலன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் கிருஷ்ணன், ஜனாா்த்தனன், ரவீந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரசுப் போக்குவரத்து கழகங்களைத் தனியாரிடம் விற்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ஒப்பந்த முறையில் ஓட்டுநா்கள நியமனம் செய்வதைக் கைவிடுவது, உதிரி பாகங்கள் வழங்காமல் தொழில்நுட்ப பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிடுவது, மத்திய அரசு உயா்த்தி வழங்கிய 4 சதவீத தினப்படியை உடனடியாக வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.