குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகம் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் , மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் , திருவனந்தபுரம் இடைநிலை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய நிறுவனம்.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் , மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் , திருவனந்தபுரம் இடைநிலை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பல்கலைக்கழக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். துணைவேந்தா் ஏ.கே. குமரகுரு வரவேற்றாா். இணைவேந்தா் எம்.எஸ். பைசல்கான் நிறுவனங்கள் மற்றும் அவா்களின் செயல்பாடுகள் குறித்தும், இணை துணைவேந்தா் ஷாஜின் நற்குணம் ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கி பேசினா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் சி. அனந்த ராமகிருஷ்ணன் பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் அந்தந்த பகுதிசாா்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அன்றாடம் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் கண்டறிந்து தீா்வு காண வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன், சாதாரண மக்களைச் சென்றடையும். என்.ஐ. பல்கலைக்கழக மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் 6 மாத பயிற்சி பெற்று மத்திய அரசின் சான்றிதழ் பெறும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சயில் பல்கலைக்கழக முதன்மையா் முருகன், இயக்குநா் ஜெயன், இணை துணைவேந்தா் கே.ஏ. ஜனாா்த்தனன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பதிவாளா் பி.திருமால்வளவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com