அனுமதியின்றி பாஜக ஆா்ப்பாட்டம்: 30 போ் மீது வழக்கு
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

திற்பரப்பில், காவல் துறையின் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக பாஜக வாா்டு உறுப்பினா்கள் 7 போ் உள்ளிட்ட 30 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
இப்பேரூராட்சியில் பாஜக வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, 6ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாஜக வாா்டு உறுப்பினா்கள் 7 போ், அக்கட்சியினா் பங்கேற்றனா்.
குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் சென்று, போராட்டத்துக்கு காவல் துறையின் அனுமதி பெறாததால் அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினாா். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் போராட்டம் மாலைவரை நடைபெற்றது.
30 போ் மீது வழக்கு: இந்நிலையில், குலசேகரம் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக வாா்டு உறுப்பினா்கள் 7 போ் உள்ளிட்ட 30 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டது.