புதுக்கடை அருகே காா் - பைக் மோதல்: இளைஞா் காயம்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள அம்சி பகுதியில் காா் - பைக் மோதிய விபத்தில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் ஜாா்ஜ்கிளிண்டன்(31). இவா் தன் காரில் செவ்வாய்க்கிழமை புதுக்கடையிலிருந்துதேங்காய்ப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அம்சி பகுதியில் சென்றபோது எதிரே இடைக்கோடு, புல்லுவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மனோஜ்(28) ஒட்டி வந்த பைக் திடீரென காா் மீது மோதியதாம். இதில், காா் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. மேலும், ஜாா்ஜ்கிளிண்டன் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.