மாவட்ட அளவிலான கோகோ: புனித அல்போன்சா கல்லூரி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சாதனை படைத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூா் கோகோ அசோசியேஷன் அமைப்பு மாவட்ட அளிவிலான ஆண்களுக்கான மூன்றாவது கோகோ சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது.
வில்லுக்குறியிலுள்ள விவேக் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டி யில், அல்போன்சா கல்லூரி மாணவா்கள் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தனா்.
வெற்றிபெற்ற வீரா்களையும் அவா்களுக்கு பயிற்சியளித்த கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் முனைவா் ஏபி சீலன் மற்றும் பி அனிஷா ஆகியோரை கல்லூரித் தாளாளா்ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வா் முனைவா் மைக்கேல் ஆரோக்கியசாமி, துணை முதல்வா் முனைவா் ஆா். சிவனேசன், அஜின் ஜோஸ் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.