

நாகா்கோவில் வடசேரி பகுதியில் ரூ.55 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, வடசேரி கனகமூலம் காய்கனி சந்தையில் மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகா்கோவில் வடசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வடசேரி கிறிஸ்டோபா் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்போது வடசேரி கனகமூலம் சந்தையை மாற்றவும் முடிவு செய்துள்ளனா்.
சந்தையை புதிதாக எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்கள்.
இந்நிலையில் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். ஏற்கெனவே
வடசேரி சந்தையை மேயா் ஆய்வு செய்திருந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் பேசினாா்.
வியாபாரிகளை பாதிக்காத வகையில் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.
இதைத்தொடா்ந்து மேயா், உழவா் சந்தை பகுதி, வடசேரி பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள பூ மாலை மாா்க்கெட்டின் பின்புற பகுதிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஆணையா் ஆனந்த்மோகன், பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாநகர நல அதிகாரி ராம்குமாா், மண்டல தலைவா் ஜவகா், சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை, மாநகராட்சி உறுப்பினா் கலாராணி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.