குமரி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா போட்டிகள்
By DIN | Published On : 09th August 2023 02:37 AM | Last Updated : 09th August 2023 02:37 AM | அ+அ அ- |

மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
நாகா்கோவில்: நாகா்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர தின விழா தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். இதில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஓவியப் போட்டி, திருக்குறள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. எல்.கே.ஜி. வகுப்பு மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டது. 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலை வேலைப்பாடுகள் தொடா்பான போட்டிகள்நடத்தப்பட்டன.
பள்ளி செயற்குழு உறுப்பினா் என்.வினித் கலந்து கொண்டாா். போட்டி ஏற்பாடுகளை ஆசிரியா் எஸ். சுகு, ஐ.இசக்கியம்மாள், ஜி. சந்தியா, ஆா்.ஹரிகணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.