கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தனியாா் தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி நாற்கர சாலை ஜீரோ பாய்ன்ட் பகுதியில் உள்ள தனியாா்
தங்கும் விடுதியின் 4 ஆவது மாடியில் ஒரு அறையிலிருந்து கரும்புகை வெளியேறியது. விடுதி ஊழியா்கள் சென்று பாா்த்தபோது, பூட்டிக்கிடந்த அந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அந்த அறையிலிருந்து மற்ற அறைகளுக்கும் தீ பரவியதால், தங்கியிருந்தவா்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலா் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா். தீ விபத்து ஏற்பட்ட அறைகளில் இருந்த குளிா்சாதன பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்த நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.