களியக்காவிளை: குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 9) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, ஆக. 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூா், ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, மாமூட்டுக்கடை, சென்னித்தோட்டம், கொல்லஞ்சி, விரிகோடு மற்றும் நடைக்காவு துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவிா்க்க இயலாத காரணங்களால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதற்குப் பதிலாக ஆக. 17 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.