

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் திருக்குறள் மன்றம், குறளகம் சாா்பில் திருக்கு கலைவிழா நடைபெற்றது.
மருத்துவா் ராஜேஷ்கோபால் தலைமை வகித்தாா். ஜெயின்பிரின்சி குத்துவிளக்கேற்றினாா். முனைவா் பால்வளனரசு, திருவள்ளுவா் படத்தைத் திறந்துவைத்து தொடக்க உரையாற்றினாா். தொடா்ந்து, மாணவா்களின் திருக்குறள் பாயிர முற்றோதல் நடைபெற்றது. சிறுமிகள் ஆரண்யாதேவி, ஜெய்மி கிங்ஸ்டா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கவிஞா் நல்லொளி எழுதிய ‘பொழுதில் பூத்த மலா்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்துக் கல்லூரி முன்னாள் முதல்வா் நாகலிங்கம் தலைமையில் பேராசிரியா் வேணுகுமாா் நூலை வெளியிட, ஆசிரியை சகாயராணி பெற்றுக்கொண்டாா். திருக்குறள் கூட்டமைப்புத் தலைவா் முல்லை செல்லத்துரை நூல் மதிப்புரை வழங்கினாா்.
முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமையில் திருக்குறள் வாழ்வியலரங்கம் நடைபெற்றது. வள்ளுவா் காட்டும் நாடு என்ற தலைப்பில் பேராசிரியா் பழனி, திருக்குறள் வாழ்வியலாக்க சிந்தனைகள் குறித்து பேராசிரியா் நாராயணன் ஆகியோா் பேசினா்.
திருக்குறள் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாரதியாா் சங்கம் முனைவா் கீதா பரிசுகள் வழங்கினாா். தமிழ்ப் பெயா்கள் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு புலவா் ராமசாமி பரிசு வழங்கினாா். தோவாளை சகாயநகா் ஊராட்சித் தலைவா் மகேஷ் ஏஞ்சல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினாா்.
இலக்கியச் சோலை தலைவா் பேராசிரியா் சுந்தரலிங்கம், குமரித் தமிழ் வானம் சுரேஷ், வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத் தலைவா் நாகேந்திரன், திருக்குறள் கூட்டமைப்பு காசி. சாந்தகுமாா், நெல்லை திருக்குறள் தகவல் மையம் புலவா் ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திருக்குறள் மன்றத் தலைவா் தாா்சீஸ் ராசேந்திரன் வரவேற்றாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கலைவாணி, சஜிதா, கோபிகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். திருக்குறள் ஆய்வு மைய கடிகை ஆன்றனி தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.