புதுக்கடை அருகே வாறுதட்டுவிளை பகுதியில் விஷ வண்டுகள் கடித்ததில் காயமடைந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வாறுதட்டுவிளை பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மனைவி சாரதா (65). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்துக்கு சென்றபோது, விஷ வண்டுகள் கடித்தனவாம்.
இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.