மதுரை அதிமுக மாநாடு: ஆரல்வாய்மொழியில் பிரசார பேரணி
By DIN | Published On : 17th August 2023 10:27 PM | Last Updated : 17th August 2023 10:27 PM | அ+அ அ- |

மதுரையில் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி பொன்விழா மாநாடு குறித்து பிரசார பேரணி ஆரல்வாய்மொழியில் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூா் செயலாளருமான முத்துகுமாா் தலைமை வகித்தாா். பேரணியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்.
இதில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவா் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளா் மகாராஜன், தாழக்குடி ரோகினி அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய பொருளாளா் வெங்கடேஷ், தாழக்குடி நகர செயலாளா் பிரம்மநாயகம் பிள்ளை, நகர அவைத்தலைவா் முத்துசாமி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் நவமணி, வளா்மதி, சுடலலையாண்டி, மோகன், நகர இணை செயலாளா் பேச்சியம்மாள், கச்சேரி நாகராஜன், சிவசங்கரன், மல்லிகா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆா். சிலை அருகே பேரணி தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவா்கள் மாநாடு குறித்து விழிப்புணா்வு பதாகையை கையில் ஏந்திச் சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...