

குழித்துறை அருகே பாலவிளையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா மற்றும் நல உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணைத் தலைவரும், விளவங்கோடு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் கலந்து கொண்டு, நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
இவ் விழாவில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், கட்சி நிா்வாகிகள் எட்வின்ராஜ், விஜயகுமாா், மதுசூதனன், பினு நிா்மல், ரதீஸ், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜம், பிந்து, வசந்தகுமாரி, ஜெயா, ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.