நாகா்கோவில் குறளகத்தில் வள்ளலாா் விழா
By DIN | Published On : 12th January 2023 01:05 AM | Last Updated : 12th January 2023 01:05 AM | அ+அ அ- |

நாகா்கோவில் கீழராமன்புதூரில் உள்ள திருக்கு வாழ்வியலாக்கப் பயிற்சி மையத்தில் திருக்கு சிந்தனை முற்றம் மற்றும் வள்ளலாா் விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்தாா். தியாகி கோ. முத்துக்கருப்பன், பேராசிரியா் பத்மநாபன், முனைவா் நாகலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குறளகம் நிறுவனா் கவிஞா் தமிழ்க்குழவி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில். மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா சிறப்புரையாற்றி, ஐ. ஏ.எஸ். அகாதெமி நடத்திய திருக்கு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குறளக மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
கவிஞா் தமிழ்க்குழவி இயற்றிய, சிறுமலா் தெரசா பிள்ளைத் தமிழ் நூல் பற்றி அறிமுக உரையாற்றிய ஆசிரியா் தங்கம் பாராட்டப்பட்டாா்.
விழாவில் மருத்துவா் ராஜேஷ்கோபால், சமூக சேவகா் ஜெகன், ஆங்கில பயிற்சி மைய பேராசிரியா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.