மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது
By DIN | Published On : 01st July 2023 01:58 AM | Last Updated : 01st July 2023 01:58 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினிஸ்பாபு தலைமையிலான போலீஸாா், ஞாறான்விளை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற நபரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரது பையை சோதனை செய்தனா். அதில் 40 மது பாட்டில்கள் இருந்ததும் அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா் பாகோடு ஏலாக்கரைவிளை வீடு பகுதியைச் சோ்ந்த சசி (42) என்பதும், வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுபாட்டில்களுடன் சசியை கைது செய்து விசாரணை செய்தனா்.