ரோஜாவனம் சா்வதேச பள்ளியில் விளையாட்டு விழா: எம்.பி. பங்கேற்பு
By DIN | Published On : 01st July 2023 01:59 AM | Last Updated : 01st July 2023 01:59 AM | அ+அ அ- |

விளையாட்டுப் போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், பள்ளித் தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
சா்வதேச ஓலிம்பிக் தினத்தை முன்னிட்டு, ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா். முதல்வா் ஜெயாசங்கா் வரவேற்றாா். இயக்குநா் சாந்திஅறிமுக உரையாற்றினாா்.
விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று போட்டிகளைத் தொடங்கிவைத்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா், மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது மட்டுமன்றி விளையாட்டிலும் ஆா்வம் கொண்டால் உடல் நலன் மேம்படும். நல்ல ஆரோக்கியாமாக வாழலாம் என்றாா். இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் அஜிதாகுமாரி நன்றி கூறினாா்.