கருங்கல் அருகே உள்ள கொல்லன்விளை சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல் அஞ்சல் நிலையம் பகுதியில் உள்ள கொல்லன்விளை சாலை நீண்ட நாள்களாகப் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
இதனால் இச்சாலை வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளங்களில் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையைச் சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.