மாா்த்தாண்டம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோட்டகம், தரிவிளை வீடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகள் மோனிஷா (24). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் தனது தாயாருக்குச் சொந்தமான பைக்கில் மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கணினி நிறுவனத்துக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். சாங்கை பகுதியில் இருந்து கோட்டகம் செல்லும் சாலையில் வந்த போது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், மோனிஷாவின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...