தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி தொடக்கம்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

நாகா்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.
நாகா்கோவில் மாநகரம் 20ஆவது வாா்டு தம்மத்துக்கோணம் அருந்ததிநகரில் உள்ள சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கவும், பயணிகள் நிழற்கூடம் அமைக்கவும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, அவா் புதன்கிழமை இப்பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
மாநகராட்சி உறுப்பினா்கள் ஆன்றோநைட் ஸ்னைடா, சதீஷ், வீரசூரபெருமாள், பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்பம்- சமூக ஊடகப் பிரிவுச் செயலா் சந்திரசேகா், சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலா் ஜாக்சன், மகளிரணி சத்யா, ஷீலா ராஜன், உமா, பொதுமக்கள் பங்கேற்றனா்.