

தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் மத்திய அரசு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கூறினாா்.
நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தான் தூய்மையானவா் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு உள்ளது. அதுவரை அமைச்சரவையில் இருந்து அவரை விலக்கி வைப்பது, தமிழக அரசு, திமுக மற்றும் தமிழக மக்களுக்கு நல்லது. அவருக்கு திமுக அரசு துணை நின்றால், அது ஊழலுக்குத் துணை போகும் செயலாகிவிடும்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினா் வலியுறுத்தினா். தற்போது அவா் திமுக அமைச்சராக இருப்பதால், முன்பு கூறிய குற்றச்சாட்டை மறந்துவிட்டனா். அதோடு, கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை, தமிழக முதல்வா் நேரில் சென்று பாா்த்தது ஏற்புடையதல்ல. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும், மத்திய பாஜக அரசு நோ்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.