

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட வா்த்தக நாடாா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 9.50 லட்சத்திலும், 17ஆவது வாா்டு ஸ்காட் நகா் பகுதியில் ரூ. 48.75 லட்சத்திலும் தாா்ச் சாலைப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
இப்பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். முன்னதாக, 44ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள் நகா் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். புதைச் சாக்கடை அமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை நிறைவடையும் இடத்தில் நீா்உறிஞ்சிக் குழி அமைப்பது தொடா்பாக அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.
மேலும் பிரதான சாலை, குறுக்கு சாலைகளில் உள்ள செடிகளை வெட்டி அப்புறப்படுத்தவும், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை முறைப்படுத்த நீா்உறிஞ்சு குழி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி நிா்வாக அலுவலா் ராம்மோகன், பொறியாளா் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ், துணை மேயா் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவிப் பொறியாளா் சந்தோஷ், மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, கெளசுகி, பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் பிரபாகரன், சுதாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.