புதுக்கடை அருகே முன்சிறை பகுதியில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 150 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
முன்சிறை பகுதியில், மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் சுரேஷ்குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
அந்த ஆட்டோவில் ,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. அரிசி, ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள உணவுப் பொருள் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.