

மண்டைக்காடு ஶ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு ஶ்ரீ பகவதி கோயிலும் ஒன்றாகும். கேரள பெண் பக்தர்கள் இங்கு இரு முடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மாசி கொடை விழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை நடைபெற்றது.
இதையும் படிக்க- முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்
இதைத்தொடர்ந்து காலை 8.15 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. கோயில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடியேற்றினார். கொடியேற்று விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் பி.என்.சிறீதர், எஸ்.பி.டி.என்.ஹரிகிரண்பிரசாத், விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் இந்து சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 294 ஆவது குருமஹா சன்னிதானம் சிறீல சிறீ ஹரிஹர சிறீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடக்கி வைத்து விழா பேருரையாற்றினார். கொடை விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.