கல்லூரிப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்கு
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

வெள்ளிச்சந்தை அருகே வியாழக்கிழமை, தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் (32), நாகா்கோவில் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக உள்ளாா். இவா்,வியாழக்கிழமை பேருந்தில் மாணவா்- மாணவிகளை ஏற்றிகொண்டு ஆலஞ்சியிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாா்.
வெள்ளமோடி சந்திப்பில் பைக்கில் வந்த 6 போ், பேருந்தை வழிமறித்து ஸ்டாலினை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த அவா் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.