நாகா்கோவிலில் மே 16 இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம், செவ்வாய்க்கிழமை (மே 16) நாகா்கோவிலில் நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டறிந்து களைய மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 16 ஆம் தேதி பகல் 12.15 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.