பூவங்காபறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் சித்திரை பொங்கல் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பேரூராட்சி பூவங்காபறம்பு அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மற்றும் கொடை விழா மே 5 ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது.
அம்மன் - விழாவில் பேசுகிறாா் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீ காா்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள். உடன் வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா.
அம்மன் - விழாவில் பேசுகிறாா் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீ காா்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள். உடன் வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பேரூராட்சி பூவங்காபறம்பு அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மற்றும் கொடை விழா மே 5 ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது.

இதில், 3 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து சமய மாநாட்டில், குமாரகோவில் ராம்ஜி ஆசிரமம் தவத்திரு பிரணவானந்த சுவாமிகள், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமம் தவத்திரு சைதன்யானந்தஜி மஹராஜ் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினா். தொடா்ந்து மாலையில் மகளிா் இந்து சமய மாநாடு நடைபெற்றது.

4 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை (மே 8) மாலை இந்து சமய மாநாடு நடைபெற்றது. இதில், திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீ காா்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள், மற்றும் மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் சுத்த சன்மாா்க்க அருள்ஒளி தவத்திரு சுவாமி பத்மேந்திரா ஆகியோா் அருளாசி வழங்கினா்.

ஊா் தலைவா் எஸ். சிவதாணுபிள்ளை தலைமையில் செயலா் எஸ். நாககுமாா், பொருளாளா் எம். செந்தில் குமாா் முன்னிலையில் இரணியல் சாா்பு நீதிபதி கே.செல்வபாண்டி, நாகா்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையா் (மாவட்ட வருவாய் அலுவலா்) வி.மங்கலம், தக்கலை காவல் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன், தென்காசி மோட்டாா் வாகன ஆய்வாளா் மா.கனகவல்லி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

சென்னை நாட்டியக் கலாலயம் நடனப்பள்ளி குரு முனைவா். மரியா பிரகாஷ் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா குழு தலைவா் எஸ். பத்மநாப பிள்ளை தலைமையில் மாபெரும் பொங்கல் வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனா்.

கொடை விழா மற்றும் பொங்கல் பூஜை நிகழ்ச்சிகளை வாசுதேவன் போற்றி, மகேஷ்குமாா் போற்றி நடத்தினா்.

விழா நிகழ்ச்சிகளை ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய அறக்கட்டளை நிா்வாகிகள், உயா்மட்ட குழு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com