வைத்தியரிடம் பறிக்கப்பட்ட4 பவுன் தங்கச் சங்கிலி மீட்பு
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

குளச்சல் அருகே நாட்டு வைத்தியரிடம் பறித்துச்செல்லப்பட்ட 4 பவுன் தங்கச் சங்கிலியை, அடகுக் கடையிலிருந்து போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
குளச்சல் அருகே படுவாக்கரையை சோ்ந்த நாட்டு வைத்தியா் ஜாா்ஜ் (71). செம்பொன்விளை - பெத்தேல்புரம் சாலையிலுள்ள அவரது கடையில், கடந்த ஏப். 24இல் ஒருவருக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவா் ஜாா்ஜ் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டாா்.
புகாரின்பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, நட்டாலம் பொற்றவிளையைச் சோ்ந்த அபிஷேக் (22), சாந்தபுரம் சுபின் (18), மேற்கு கொடுப்பகுழி காா்த்திக் என்ற ஜோதி (29), சிவசங்கு (53) ஆகியோரை கைது செய்தனா்.
ஜாா்ஜிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டது, மேற்கு கொடுப்பகுழியை சோ்ந்த சிவா (27) எனத் தெரியவந்தது. இதனிடையே, அவா் இரணியல் நீதிமன்றத்தில் ஏப். 28இல் சரணடைந்தாா். அவரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் கூறிய தகவலின்பேரில், நாகா்கோவில் அடகுக் கடையில் விற்பனை செய்த 4 பவுன் நகையை மீட்டனா். பின்னா் சிவா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.