சித்தன்குடியிருப்பில் அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 22nd May 2023 01:19 AM | Last Updated : 22nd May 2023 01:19 AM | அ+அ அ- |

கரும்பாட்டூா் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்குடியிருப்பில் ரூ. 11.97 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது. ஊராட்சித் தலைவா் தங்கமலா் சிவபெருமான், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பால் தங்கம், கரும்பாட்டூா் ஊராட்சி வாா்டு கவுன்சிலா் மணிகண்டன், ஊராட்சிச் செயலா் காளியப்பன், அரசு ஒப்பந்ததாரா் செல்வக்குமாா், ஊா்ப் பிரமுகா்கள் பால்நாடாா், லிங்கம், சதிஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.