கொல்லங்கோட்டில்டி ஒய்எஃப்ஐ உறுப்பினா் சோ்க்கை
By DIN | Published On : 22nd May 2023 01:16 AM | Last Updated : 22nd May 2023 01:16 AM | அ+அ அ- |

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உறுப்பினா் சோ்க்கை கொல்லங்கோட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் கொல்லங்கோடு வட்டாரத் தலைவா் ராசிக் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் ரமேஷ், வள்ளவிளை கிளைத் தலைவா் அனுசுதீன், கிளைச் செயலா் அகமது, சனீா்கான், சஜின், முனீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், வள்ளவிளை ஏகேஜி நகரைச் சோ்ந்த ஆலிஹாவுக்கு முதல் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.