ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா

மாடுகட்டிவிளை ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோயில் 4 நாள் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா

மாடுகட்டிவிளை ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோயில் 4 நாள் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி மாலை 6.30 மணிக்கு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட பாஜக செயலா் வளையாபதி ஸ்ரீ சுயம்பு தொடக்கி வைத்தாா். இரவு 7.30 மணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு விநாயகா் பூஜை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 4 மணிக்கு கடலில் தீா்த்தம் எடுத்து வருதல், இரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 2 மணிக்கு ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். மூன்றாம் நாளான 23ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்ரீ தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடா்ந்து அம்மனுக்கு பூப்படைப்பு, மாலை 6 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வலம் வருதல், மாலை 6.15 மணிக்கு சிலம்பாட்டம், நள்ளிரவு 1 மணிக்கு அம்மனுக்கு ஊட்டு கொடுத்து சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெறும்.

நிறைவு நாளான 24ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு செங்கிடாகாரன், கருங்கிடாக்காரன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடா்ந்து சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை ஊா் நிா்வாகத்தினா் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com