குமரி கோயிலில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வளாகத்தில் பெண் சுற்றுலாப் பயணி தவறவிட்ட 10 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிரசாதப் பொருள் விற்பனை கடை உரிமையாளரை போலீஸாா் பாராட்டினா்.

திருச்சி மாவட்டம், செங்கதிா் சோலைப் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா், 35 பேருடன் கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். இவா், காலையில் சூரிய உதயம் பாா்த்துவிட்டு பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, 10 பவுன் நகையுடன் தனது பா்ஸை தவறவிட்டாா். கோயில் வளாகம் முழுவதும் தேடியும் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அமுதா தவறவிட்ட பா்ஸை, அந்தக் கோயில் வளாகத்தில் பிரசாதப் பொருள் விற்பனை கடை நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவா் மீட்டு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தாா். நோ்மையுடன் நடந்துகொண்ட ராமச்சந்திரனை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com