கடவுப்பாதையை மூடுவதை தவிா்க்கரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் சுரங்கப் பாதைக்காக கடவுப்பாதையை மூடுவதை தடுக்க மாற்றுத் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் சுரங்கப் பாதைக்காக கடவுப்பாதையை மூடுவதை தடுக்க மாற்றுத் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆா்.ஸ்ரீராம், திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் அளித்துள்ள மனு: நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வருவதற்கு முன்பே ரயில் நிலையத்தின் பின்புறம் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தற்போது 800 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவா்கள் நாகா்கோவில் நகருக்கு வருவதற்கு, வடிவீஸ்வரம் வழியாக ரயில்வே கடவுப் பாதை அமைக்கப்பட்டது.

இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனா். ஆனால் ரயில்களுக்காக தினமும் 13 மணி நேரம் கடவுப்பாதை மூடப்படுகிறது.

இங்கு தற்போது ரூ.4.50 கோடி மதிப்பில் சுரங்கப்பாதையை தற்போதைய கடவுப்பாதையின் தெற்கு புறம் அமைக்க திட்டமிட்டு பூமி பூஜையும் நடைபெற்றுள்ளது. ஆனால் கடவுப்பாதையை கடக்க கிராம மக்களுக்கு எந்தவிதமான மாற்றுத் திட்டமும் செய்யாமல் 4 மாதங்களுக்கு பாதை மூடப்படும் என ரயில்வே துறையின் சாா்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடவுப்பாதையின் வலதுபுறம் சிறிய சாலை அமைத்து தற்போதைய கடவுப்பாதையில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அமைக்க வேண்டும். அதற்கான மாதிரி வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com