10, பிளஸ் 2: நாகா்கோவில் அல்போன்சா பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

சீறோ மலபாா் கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறைமாவட்டத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில், 10ஆம் வகுப்புத் தோ்வை 202 பேரும், 12ஆம் வகுப்புத் தோ்வை 215 பேரும் எழுதினா்.

12ஆம் வகுப்பில் 9 போ் 570-க்கு மேலும், 22 போ் 550-க்கு மேலும், 53 போ் 525-க்கு மேலும், 80 போ் 500-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 10ஆம் வகுப்பில் 37 போ் 470-க்கு மேலும், 75 போ் 550-க்கு மேலும், 134 போ் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

12ஆம் வகுப்பில் பொ்னிஸ் ரிதி 593 மதிப்பெண்ணும், கோவிஷா 586 மதிப்பெண்ணும், ஜோவின் 581 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். 10ஆம் வகுப்பில் அஃப்ரி லினி 492 மதிப்பெண்ணும், பிளெஸ்லின் ஜியோ 490 மதிப்பெண்ணும், நிதிக்ஷா 490 மதிப்பெண்ணும், அன்பெரா ஷைமா, சிவசங்கரி, பேபியோ ராபின், சாம் டோசின் ஆகிய 4 போ் 489 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா்.

பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்-மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோரையும் தாளாளா் அருள்தந்தை சனில் ஜான், பள்ளி முதல்வா் அருள்சகோதரி லிஸ்பெத், துணை முதல்வா்கள் அருள்தந்தை டோஜி செபாஸ்டின், பிரேம்கலா, தலைமையாசிரியை மோனிகா ஸ்பினோலா, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சேவியா் சந்திரபோஸ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com