மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
By DIN | Published On : 24th May 2023 02:00 AM | Last Updated : 24th May 2023 02:00 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேங்காய்ப்பட்டனம் அருகே தாழவிளைவீடு, வேட்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். தொழிலாளியான இவா், மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்றாராம்.
அப்போது கிள்ளியூா், நுள்ளிவிளை பகுதியைச் சோ்ந்த ஜாண் கிறிஸ்டோபா் மகன் ஜெபின் (22) ஓட்டிவந்த பைக் செல்வராஜ் மீது மோதியதாம். இதில், செல்வராஜ் உயிரிழந்தாா். காயமடைந்த ஜெபின் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.