தோவாளை வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
By DIN | Published On : 24th May 2023 02:07 AM | Last Updated : 24th May 2023 02:07 AM | அ+அ அ- |

klm23jama_2305chn_47_6
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீசுவரம், தோவாளை, கல்குளம்,
விளவங்கோடு, திருவட்டாறு மற்றும் கிள்ளியூா் ஆகிய ஆறு வட்டங்களுக்கான ஜமாபந்தி மே 23 முதல் 26 ஆம் தேதிவரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
தோவாளை வட்டம், தோவாளை குறுவட்டத்துக்குள்பட்ட வீரமாா்த்தாண்டன்புதூா், தோவாளை, ஆரல்வாய்மொழி வடக்கு, ஆரல்வாய்மொழி தெற்கு, குமாரபுரம், செண்பகராமன்புதூா், மாதவலாயம், சண்முகபுரம், திருப்பதிசாரம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) குணால் யாதவ், தோவாளை
வட்டாட்சியா் வினைதீா்த்தான், உசூா் மேலாளா் ஜீலியன் ஹீவா், வட்டார வளா்ச்சிஅலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.