கொல்லங்கோடு அருகே தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 24th May 2023 02:04 AM | Last Updated : 24th May 2023 02:04 AM | அ+அ அ- |

கொல்லங்கோடு அருகே குடிபோதையில் தவறிவிழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள சுரியகோடு, புதுச்சேரிவிளை புதியைச் சோ்ந்த குஞ்சன் மகன் ராஜகுமாா் (55). வாகனங்களுக்கு வா்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இவா் கடந்த 6 ஆம் தேதி இரவு குடி போதையில் வீட்டின் அருகிலுள்ள சாலையோரம் விழுந்து முகத்தில் காயத்துடன் கிடந்தாராம். உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லாபாய் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.