கிள்ளியூா் தொகுதி சாலைகள் சீரமைப்பு கோரி அமைச்சரிடம் மனு

அமைச்சா் கே.என். நேருவிடம் மனு அளிக்கிறாா் கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்.
கிள்ளியூா் தொகுதி சாலைகள் சீரமைப்பு கோரி அமைச்சரிடம் மனு

அமைச்சா் கே.என். நேருவிடம் மனு அளிக்கிறாா் கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்.

களியக்காவிளை, மே 26: கிள்ளியூா் தொகுதியில் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கைக் கோரி அமைச்சா் கே.என். நேருவிடம், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் மனு அளித்தாா்.

அதன் விவரம்: சுனாமி கூட்டுக் குடிநீா் திட்டம் கடந்த 2006இல் செயல்படுத்தப்பட்டது. இதற்காக விளாத்துறையில் இருந்து ராஜாக்கமங்கலம் வழி கோவளம் வழி 60 கி.மீ. வரை சாலையின் நடுவில் ராட்சத கான்கிரீட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக் குழாய்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் நீா் வெளியேறி சாலை சேதமடைந்துள்ளது.

கிள்ளியூா் தொகுதி உள்பட 9.6 கி.மீ.க்கு கான்கிரீட் குழாய்களை டிஐ பைப்புகளாக மாற்ற தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ரூ. 27.11 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருங்கல் பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கொல்லங்கோடு புதிய நகராட்சிக்குள்பட்ட கிராத்தூா், வெங்குளங்கரை பகுதிகளில் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கிள்ளியூா் பேருந்து நிலையத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். ததேயுபுரத்திலுள்ளத பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க வேண்டும். இத்தொகுதியில் அனைத்து சாலைகளையும் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com