சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தொடக்கம்

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தொடக்கம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. காலை 6 மணிக்கு திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தாா். குருமாா்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியறை பணிவிடைகளை குருமாா்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோா் செய்திருந்தனா். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தியும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்திலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா பவனி நடைபெறும்.

கலிவேட்டை: 8-ஆம் நாள் திருவிழாவான ஜூன் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், அன்னதானமும் நடைபெறும். 9-ஆம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ஆம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோட்டம்: 11-ஆம் நாள் திருவிழாவான ஜூன் 5-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள். இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழா நாள்களில் காலை, மாலை அய்யாவுக்குப் பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்ட ளை சாா்பில் தலைமைப்பதி வளாகத்தில் காலை, நண்பகல் இரவு என மூன்று வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com