கன்னியாகுமரியில் கட்டுமானத் தொழிலாளா்கள் மகளிா் மாநாடு
By DIN | Published On : 07th November 2023 02:17 AM | Last Updated : 07th November 2023 02:17 AM | அ+அ அ- |

மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசிய அமைப்பின் அகில இந்தியத் தலைவா் கே. ஹேமலதா.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், அகில இந்திய உழைக்கும் பெண்கள் கட்டுமான அமைப்பின் மகளிா் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளா் ஷீலா அலெக்ஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜே. லூா்து மேரி குத்துவிளக்கேற்றினாா். அகில இந்தியத் தலைவா் கே. ஹேமலதா மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
அகில இந்திய துணைத் தலைவா் சோனாலி தாஸ் ஷா்னா அறிக்கை தாக்கல் செய்தாா். தமிழ்நாடு சிஐடியு பொதுச்செயலா் ஜி. சுகுமாா், அகில இந்தியப் பொதுச்செயலா் யு.பி. ஜோசப் ஆகியோா் பேசினா்.
பணியிடங்களில் பெண் கட்டுமானத் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், அவா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரவேற்புக் குழுத் தலைவா் பி. இந்திரா வரவேற்றாா்; பொருளாளா் எம். வேலம் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...