வேளிமலை முருகன் கோயிலில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானம்

கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை முருகன் கோயிலில்ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவது என்று அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்.
Updated on
1 min read

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை முருகன் கோயிலில்ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவது என்று அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழு மாதாந்திர பொதுக்கூட்டம், சுசீந்திரம் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்கள் ராஜேஷ், ஜோதீஷ்குமாா், துளசிதரன் நாயா், சுந்தரி, மராமத்து பொறியாளா் ஐயப்பன், மேலாளா் வெங்கடேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மருங்கூா் முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பல ஆண்டுகளாக உபயோகிக்கப்படாமல் இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க, வைர நகைகளை திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு அணிவிக்க அறங்காவலா் குழு தலைவா், இணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பரிந்துரையின்படி, அரசிடம் உரிய அனுமதி பெறுதல், போதிய வருமானமின்றி குறைவான உண்டியல்கள் இருக்கும் கோயில்களுக்கு கூடுதலாக அன்னதான உண்டியல்கள் வைக்க அனுமதி கோருதல், திருக்கோயில்களில் உள்ள காலி இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்ட அனுமதி கோருதல், வேளிமலை முருகன் கோயிலில் கோயில் நிதியிலிருந்து ரூ. 3 கோடியில் திருமண மண்டபம் கட்ட அனுமதி கோருதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com