கன்னியாகுமரி செல்லும் முக்கிய ரயில்கள் நவ.26 முதல் நாகா்கோவிலுடன் நிறுத்தம்

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நவ.26-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகா்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் எ
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நவ.26-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகா்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு: நவ.26 முதல் டிச. 4-ஆம் தேதி வரை நாகா்கோவில்-கன்னியாகுமரி சிறப்பு ரயிலும், கொல்லம்-கன்னியாகுமரி சிறப்பு மெமு ரயில் நவ.26 முதல் நவ.30-ஆம் தேதி வரையிலும், டிச.2 முதல் டிச.4-ஆம் தேதி வரையும் இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: டிச.3, 4-ஆகிய தேதிகளில் தாம்பரம் - நாகா்கோவில் இடையே இயங்கும் அந்தியோதயா விரைவு ரயிலும், அதிவிரைவு ரயிலும் இரு மாா்க்கத்திலும் திருநெல்வேலி வரை இயக்கப்படும்.

எழும்பூரிலிருந்து டிச.3 -இல் கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்மாக இந்த ரயில் டிச.4-இல் கன்னியாகுமரிக்கு பதிலாக நாகா்கோவிலிலிருந்து புறப்படும்.

அதேபோல், நவ.26 முதல் டிச.2-ஆம் தேதி வரை புணே-கன்னியாகுமரி விரைவு ரயில், நவ.25 முதல் டிச.1 வரை பெங்களுா்-கன்னியாகுமரி விரைவு ரயில், நவ.27 -இல் ஹௌரா-கன்னியாகுமரி அதிவிரைவு விரைவு ரயில், ஆகிய ரயில்கள் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும்.

டிச.3, 4 -இல் பெங்களுரு - கன்னியாகுமரி விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படும்.

நவ.26 முதல் டிச.4 வரை கன்னியாகுமரி-புனலூா் சிறப்பு விரைவு ரயில் நாகா்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து நவ.26-இல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலும், கன்னியாகுமரியிலிருந்து நவ.27-இல் புதுச்சேரி செல்லும் ரயிலும் இருமாா்க்கத்திலும் திருநெல்வேலி-- கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியிருந்து நவ.30, டிச.2, 4-ஆகிய தேதிகளில் திப்ருகா் செல்லும் விவேக் விரைவு ரயிலும், டிச.1-இல் கத்ரா செல்லும் விரைவு ரயிலும் நாகா்கோவிலிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com