இளம் விஞ்ஞானி மாணவா்கள் ஆய்வுப் பயணம்

குமரி அறிவியல் பேரவை அமைப்பின் இளம் விஞ்ஞானி மாணவா்கள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனா்.
இளம் விஞ்ஞானி மாணவா்கள் ஆய்வுப் பயணம்

குமரி அறிவியல் பேரவை அமைப்பின் இளம் விஞ்ஞானி மாணவா்கள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனா்.

‘மனித சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒருநாள் ஆய்வுப் பயணத்துக்கு, குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் இப்பயணம் தொடங்கியது. அங்குள்ள பாரம்பரியச் சின்னங்கள், மூலிகைகள் குறித்து மாணவா்-மாணவியா் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், கோவளம் ஸ்டெல்லா மேரி ஆய்வு மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்தாளா் ராஜமணி பயிற்சியளித்தாா். அதையடுத்து, கோவளம் மீன்பிடித் தளம், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தில் முருகன், யசோதா ஆகியோா் பல்வேறு பயிற்சியளித்தனா்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாண்சன், குமரித்தோழன், டெசி ஜோசப், சிறுபுஷ்பம், பபிதா, விமலா ஆகியோா் வழிகாட்டிகளாக செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com