தனியாா் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் மனோதங்கராஜ்
By DIN | Published On : 25th October 2023 12:59 AM | Last Updated : 25th October 2023 12:59 AM | அ+அ அ- |

தனியாா் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சா் மனோதங்கராஜ் தெரிவித்தாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள , புத்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட் டுள்ள கழிப்பறையை, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் பாா்வையிட்ட பின்னா் அமைச்சா் த.மனோதங்கராஜ் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தை முழு தூய்மையான மாவட்டமாகவும், பசுமையான மாவட்டமாகவும் மாற்றும் வகையில் தனியாா் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆதரவற்ற நம்பிக்கைக்கு உதவும் கரங்கள் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூ.10 லட்சம் செலவில் கழிப்பறைகள், சுற்றுச் சுவா் கட்டுதல், வா்ணம்பூசுதல், கதவுகள்அமைத்தல், இன்டா்லாக் கற்கள் அமைத்தல், பள்ளிமேற்கூரைஅமைத்தல் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுபோன்ற ஆக்கப்பூா்வமான பணிகளை மேற்கொள்ள தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் முன் வர வேண்டும். குமரி மாவட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இது போன்று தனியாா் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், காா்பஸ் கிறிஸ்டி பள்ளி தாளாளா் பா்வீன்மேத்யூ, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, குளச்சல் நகராட்சி தலைவா் நசீா், புத்தேரி ஊராட்சி மன்றத்
தலைவா் கண்ணன், தலைமை ஆசிரியா் விஜிலாஜாய்ஸ், வழக்குரைஞா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...