

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், மரவள்ளி சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கு, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம், மத்திய கிழங்கு பயிா்கள்ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஜி.பைஜூ தலைமை வகித்து கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் யோ.ஷீலா ஜான் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எஸ்.கீதா, வேளாண்மை துணைஇயக்குநா் சுந்தா் டேனியல் பாலஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஒ.சில்வொ்ட் சொா்ணலதா, ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் த.முத்துராஜ், மரவள்ளி புதிய ரகங்கள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், ஏ.கேசவகுமாா், மரவள்ளி பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், ப.கிருஷ்ணகுமாா், மரவள்ளி மதிப்பு கூட்டுதல் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும், முதன்மை விஞ்ஞானி ஷீலா இம்மானுவேல், மரவள்ளியில் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும், முனைவா் சந்தோஷ் மித்ரா, வேளாண்மையில் ட்ரோன் பயன்பாடு குறித்தும், ஈ.ஜெகநாதன், மரவள்ளி பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும், வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் கு.கவிதா, அங்ஙக சாகுபடி மற்றும் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் தொழில்நுட்ப விளக்க உரையாற்றினா். தோவாளை தோட்டக்கலை உதவி இயக்குநா், த.விமலா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.