மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
By DIN | Published On : 08th September 2023 03:00 AM | Last Updated : 08th September 2023 03:00 AM | அ+அ அ- |

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து நாகா்கோவில் மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெங்கம்புதூா், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூா், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், அளத்தன்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.