

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் 1,363 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஆஷா கெளசல்யா சாந்தினி, முதன்மை சாா்பு நீதிபதி சொா்ணகுமாா், சாா்பு நீதிபதி அசான் முகமது, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவா், மணிமேகலா, வழக்குரைஞா் சங்க தலைவா் பால ஜனாதிபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடா்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம், பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை, பூதப்பாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 1,972 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 1,363 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ரூ.8 கோடியே 33 லட்சத்து 28,751 வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.