பொன்மனை, திற்பரப்பில் பேரூராட்சிகளில் ரூ. 1.09 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பொன்மனை, திற்பரப்பு பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 1.09 மதிப்பிலான வளா்ச்சி திட்டப்பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
Updated on
1 min read

பொன்மனை, திற்பரப்பு பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 1.09 மதிப்பிலான வளா்ச்சி திட்டப்பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், பொன்மனை, திற்பரப்பு பேரூராட்சிகள், பேச்சிப்பாறை ஊராட்சிப் பகுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, பொன்மனை பேரூராட்சி மண்ணாரங்கோடு காலனியில் 15 சென்ட் பரப்பளவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட இறகுப் பந்து, கைப்பந்து விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தாா்.

மேலும், கலைஞா் நகா்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 81 லட்சத்தில் பொன்மனை பேரூராட்சி தாழப்பிடாகை, வெண்டலிகோடு - சிறக்குளம் சாலை, பொன்மனை அமராவதி குளம் சாலை, பொன்மனை அயந்தி சாலை போன்ற சாகைளை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், பொன்மனை மங்கலம் பகுதியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தாா். பொன்மனையில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் திறந்து வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து திற்பரப்பு பேரூராட்சி கோட்டூா்கோணம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய ரேஷன்கடைக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா். பேச்சிப்பாறை ஊராட்சி மணியங்குழி பகுதியில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேரூராட்சித் தலைவா்கள் பொன்மனைஅகஸ்டின், திற்பரப்பு பொன் ரவி, செயல் அலுவலா்கள் ஜெயமாலினி, விஜயகுமாா், வாா்டு உறுப்பினா் மல்லி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், வா்த்தகா் அணி அமைப்பாளா் ஜே.எம்.ஆா். ராஜா, பேரூா் செயலா்கள் ஜெபித்ஜாஸ், ஜான் எபனேசா், சாம் பென்னட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com