புதுக்கடை அருகேயுள்ள இனயம் கடற்கரை கிராமத்தில் படகுகட்டும் தளத்திலிருந்து பணிப் பொருள்கள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சிதறால் பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ராபா்ட்(35). இவா், இனயம் கடற்கரை கிராமத்தில் படகுகட்டும் தளம்அமைத்துள்ளாா். இங்கு பழுதுநீக்க பல படகுகள் உள்ளன. இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை இங்கிருந்த கட்டா், மோட்டாா் உள்ளிட்ட பணிப் பொருள்களை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.